Street Dog Drags by a Man (Photo Credit: Instagram)

மார்ச் 21, உதய்பூர் (Rajasthan News): வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளில், விசுவாசத்தின் மறுவுருவமாக இருப்பவை நாய்கள். இந்து மத புராணங்களின் படி, நாய்கள் காலபைரவரின் வாகனமாகவும் கவனிக்கப்படுகின்றன. பெரும்பாலான ஊர்களில் இரவு நேரங்களில் பல திருட்டு போன்ற விஷயங்களை தடுத்த பெருமையும் அவைக்கு உண்டு. ஆனால், ஒருசில நபர்களால் நாயின் மீது கடுமையான தாக்குதலும் முன்னெடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நாய்கள், நோய்வாய்ப்பட்டு வெறிபிடித்து பிற உயிரினங்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றன. Self-Surgery: யூடியூப் பார்த்து தனக்குத்தானே வயிற்றைக்கிழித்து அறுவை சிகிச்சை; வீரியம் குறைந்ததும் ஐயோ., அம்மா கதறல்.. மருத்துவமனையில் அனுமதி.! 

தெருநாய்க்கு நேர்ந்த சோகம்:

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர், பளிச்சா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், ஆர்ஜெ 27 பிஎச் 1819 (RJ 27 BH 1819) பதிவெண் கொண்ட வாகனத்தில், நாய் ஒன்றை சங்கிலியால் கட்டி சாலையில் இழுத்தபடி வந்தார். இதனால் நாய் அலறியபடி வந்தது. இந்த நிகழ்வை பார்த்த பெண் ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்தவாறு நபரின் செயல்பாடுகளை கண்டித்தார். செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு சுதாரித்துக்கொண்ட நபர், நாயை சங்கிலியில் இருந்து விடுவித்தார். பெண்ணின் செயல்பாட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நபரின் செயலை கண்டித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாயை சங்கிலியால் கட்டி இழுத்து வரும் பதறவைக்கும் காட்சிகள்: