ஏப்ரல் 10, காசியாபாத் (Uttar Pradesh News): வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களில், அதிக மூர்க்கத்தனம் கொண்ட சிலவகை நாய்களால் மனிதர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. தன்னை வளர்த்த பராமரிப்பாளர், அவரின் குடும்பத்தினர், வீட்டிற்கு வெளியே சென்றால் பொதுமக்கள் என மூர்க்கத்தனம் அதிகமாகும் சமயத்தில் பாரபட்சமின்றி தாக்குதல் நடத்தும் விலையுயர்ந்த நாய் இனங்கள் மீது மாநில அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

கடித்துகுத்தறிய நாய்: இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், வைஷாலி நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆல்டாப். இவர் நேற்று தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த பிட்புல் (Ghaziabad Pitbull Dog Attack) ரக நாய் ஒன்று, சிறுவன் ஆல்டாப்பை திடீரென மூர்க்கமாகி கடுமையாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன சிறுவன், நாயின் கடியில் இருந்து தப்பிக்க முடியாமல் அலறி துடித்தான். TASMAC Shut For 3 Days: ‘குடி’மகன்களே முதலில் ஓட்டு போடுங்கள்.. தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..! 

படுகாயமடைந்த சிறுவன்: அங்கிருந்த நபர்கள் நாயை கட்டுப்படுத்த தெரியாமல், தூரத்தில் இருந்தவாறு பயத்துடன் வேடிக்கை பார்த்தனர். சிறுவனாக சமாளித்து நாயின் பிடியில் இருந்து தப்பி வீடு ஒன்றுக்குள் நுழைந்தார். பின் நாய் அக்கம் பக்கத்தினர் மற்றும் உரிமையாளரால் பிடிக்கப்பட்டு, சிறுவன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், பிட்புல் ரக நாயை பறிமுதல் செய்து அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பலத்த காயத்துடன் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.