ஜனவரி 07, கிரேட்டர் நொய்டா (Greater Noida): இன்றளவில் இளம் தலைமுறையிடையே போதைப்பொருள் பழக்கம் என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது. முன்பு கடைகளில் சிகிரெட் வாங்க வேண்டும் என்றால், பயத்துடன் ஊர்விட்டு ஊர் சென்ற இளம் தலைமுறை இன்றளவில் பெற்றோர் கண்முன்னே போதைப்பொருளை பயன்படுத்தி சீரழிந்து வருகிறது. கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களை குறிவைத்து போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் கும்பல், அதனை தங்களின் மூலதன வாய்ப்பாக பயன்படுத்தி பணம் சம்பாத்தியம் பார்த்தும் வருகிறது.
போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு: இந்நிலையில், உத்திரபிரதேசம் (Uttar Pradesh News) மாநிலத்தில் உள்ள நொய்டா, தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரதான கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் என்பது அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவரவே, அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் கும்பல் கல்லூரிகளின் விடுதி வரை சென்று வருவது எப்படி? என்ற விபரத்தையும் சேகரித்து இருக்கின்றனர்.
பிரபல நிறுவனங்களின் பெயர்களில் அதிர்ச்சி சம்பவம்: அப்போது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சிதரும் உண்மையாக, ஆன்லைன் உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற டெலிவரி நிறுவனங்களின் பெயரில், பொருட்களை டெலிவரி செய்வதாக கல்லூரி விடுதி வரை சென்று போதைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட்ட உண்மை தெரியவந்தது. இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு வலைவீசப்பட்டது. Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் பேய்மழை: இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!
செயலியில் முன்பதிவு செய்தால் டோர் டெலிவரி: ஷில்லாங் பகுதியில் இருந்து செயல்பட்டு வந்த போதைப்பொருள் கும்பல், அதனை பெறுவதற்கு போர்ட்டர் (PORTER APP) என்ற செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்ய வைத்துள்ளது. இதில் வழங்கப்படும் தகவலை பெற்று, கும்பல் போதைப்பொருளை விநியோகமும் செய்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து கஞ்சா, போதைவஸ்துகள், 7 செல்போன், லேப்டாப் போன்றவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐவர் கும்பலின் அதிர்ச்சி செயல்: இவர்களிடம் நடந்த விசாரணையில், பி.காம் பட்டதாரி சாகர், அமிட்டி பல்கலைக்கழக மாணவர் சேட்டன், ஐடிஐ பட்டதாரிகள் சச்சின், ஹரிஷ் ஆகியோர் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. நிஷாந்த் என்பவர் டெலிவரி செய்யும் நபர்களை ஒருங்கிணைத்து இருக்கிறார். இவர்கள் ஐவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.