ஜூலை 23, ராம்பூர் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டம், ஷாபாத் காவல் நிலையத்தில் கணவரின் குடும்பச்சண்டையால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், தனது கணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், பெண்ணின் கணவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு காவல் அதிகாரிகளான ஜெய்தேவ் சிங் மற்றும் அமித் குமார் ஆகியோர் இணைந்து, பெண்ணின் கணவரை சமுதாய ரீதியாக அவதூறாக பேசி தாக்கி இருக்கின்றனர். Student was Sexually Harassed: வீட்டு வாசலை சுத்தம் செய்த மாணவிக்கு பாலியல் தொல்லை; 21 வயது ரௌடியின் அதிர்ச்சி செயல்.!
காவலர் பணியிடைநீக்கம் & தொடரும் விசாரணை:
அதாவது, ஜெயதேவ் மற்றும் அமித் ஆகிய காவலர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணின் கணவரை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில், தங்களின் ஜாதிய வன்மத்தை காண்பித்து இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் வாயிலாக அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு இரண்டு காவலர்களின் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.