Kedarnath Helicopter Crash (Photo Credit : @AdityaRajKaul X)

ஜூன் 15, கேதார்நாத் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் (Kedarnath), பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். புனித யாத்திரையும் மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரை சார்தாம் யாத்திரை என்று வட மாநிலத்தில் நடப்பதுண்டு. உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை தொடங்கிய நிலையில், கேதார்நாத் கோவில் ஜூன் 3 அன்று திறக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து :

தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சென்று கேதார்நாத்தில் வழிபாடு செய்து வருகின்றனர். டேராடூனிலிருந்து கேதார்நாத் நோக்கி ஹெலிகாப்டர் மூலமாக பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை குப்தகாஷிகா பகுதியில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் கௌரிகுண்ட் (kedarnath Helicopter Crash) பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் விமானி, 5 பெரியவர்கள், 1 குழந்தை உட்பட ஆறு பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. Air India Flight AI171: ஏர் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன? குஜராத்தில் சோகம்.! 

7 பேர் பரிதாப மரணம் :

விபத்து குறித்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மோசமாக காணப்பட்ட வானிலை காரணமாக ஹெலிகாப்டர் (helicopter crash) வழி தவறி சென்று விபத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் தான் அகமதாபாத்தில் ஏர் இந்திய விமானம் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த சோகம் நடந்திருந்தது. தற்போது அது போன்று மேலும் ஒரு சோகம் நடந்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான வீடியோ (Kedarnath Helicopter Crash Video):