ஜனவரி 26, சென்னை (Chennai News): இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் (Constitution of India) நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் வகையில், ஆண்டில் ஜனவரி மாதம் 26ம் தேதி இந்திய குடியரசு தினம் (Republic Day 2025) கொண்டாடப்படுகிறது. 76 வது இந்திய குடியரசு தினம் இன்று ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் சிறப்பிக்கப்படவுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் குடியரசு தினம் 2025 கொண்டாட்டம் களைகட்டும். இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை, சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, மாநில அளவில் தலைநகர்களில் குடியரசு தினம் கொண்டாடப்படும். இந்திய குடியரசு தலைவர் & பிரதமர் முன்னிலையில் (Republic Day Delhi Parade 2025) இந்திய பாதுகாப்பு படைகளான இராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில வாரியாக அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாநில அளவிலும், மாநில தலைநகர்களில், அந்தந்த மாநில ஆளுநர், முதல்வர்களுக்கும் மரியாதை அளிக்கப்படும். இன்று லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக சிறப்பு குடியரசு தின வாழ்த்து செய்திகளை பகிறுகிறது. நீங்கள் அதனை பயன்படுத்தி உங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். Republic Day Speech in Tamil: குடியரசு தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இதோ.!
குடியரசு தின வாழ்த்து (Republic Day Wishes 2025 Tamil):
1. ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
2. இந்த குடியரசு தினத்தில் நம் நாடு செழித்து பிரகாசிக்கட்டும். சக இந்தியர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!
3. இந்தியன் என்பது நம் பெருமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் மகிமை, நம்மை பிரித்து சிறுமைப்படுத்தும் தீய சக்திகளை வேரறுத்து இந்தியன் என்று பெருமை கொள்வோம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! Republic Day Wish Pics 2025: "வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முக கலாச்சாரமும்" 76-வது இந்திய சுதந்திர தினம் - அழகான குடியரசு தின வாழ்த்துச்செய்தி இதோ.!
4. எத்தனை மொழி, எத்தனை மதம், எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பாரத்தாயின் பிள்ளைகள் தான். வாழ்க மக்கள் வளர்க பாரதம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
5. செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட அழகான நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம்… குடியரசு தின வாழ்த்துக்கள்!
6. இந்தியராக பெருமைகொள்வோம்! ஒற்றுமையுடன் தேசத்தை உயர்த்துவோம்! இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!