டிசம்பர் 30, ரூர்கே: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant Car Accident) நேற்று இரவில் டெல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் உத்திரகாண்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் டெல்லி - டேராடூன் (Delhi - Dehradun National Highway) தேசிய நெடுஞ்சாலையில் ரூர்கே அருகில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவரின் மெர்சிடஸ் சார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்தோடு தப்பிவிட்டாலும், அவரின் கார் தீக்கிரையானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்திரகாண்ட் மாநில காவல்துறை இயக்குனர் அசோக் குமார் தெரிவிக்கையில், "கார் விபத்தில் சிக்கிய பின்னர் ஜன்னலை உடைத்து ரிஷப் தப்பித்துள்ளார். அவரின் கார் எரிந்துவிட்டது. MK Stalin Condolence: பிரதமரின் தாயார் மறைவு; உருக்கத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்…!
அவர் தனியாக காரில் பயணம் செய்துள்ளார். முழங்கால், முகம் உட்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் டெஹ்ராடூன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் பயணித்த கார் விபத்திற்குள்ளாகி, அவர் படுகாயமடைந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் விரைந்து குணமடைந்து வர பலரும் பிரார்த்தனை செய்து வருவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.