ஜூன் 10, பெங்களூர் (Bangalore): தென்மேற்கு பருவமழை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உட்பட பல வடமாநிலங்களுக்கு நல்ல மழைபொழிவை தரும்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உட்பட மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள மாவட்ட பகுதிகளும் நல்ல மழையை பெரும்.
நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திற்கும் மழை அறிவிக்கப்பட்டுள்ளது. Singer Bhuvana Seshan on Vairamuthu: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது வைரமுத்துவின் விவகாரம்.. சின்மயிக்கு ஆதராக களமிறங்கிய தமிழ் பாடகி.!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, "கர்நாடக மாநிலத்தை சனிக்கிழமை (ஜூன் 10) தென்மேற்கு பருவமழை வந்தடையும். அன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பெங்களூர் நகரில் ஜூன் 10 முதல் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது."