செப்டம்பர் 11, புதுடெல்லி (New Delhi): இந்திய இரயில்வேத் துறை, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ், இலட்சக்கணக்கான ஊழியர்களை கொண்டு இயங்கும் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். இத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில், இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், கிளர்க், டைப்பிஸ்ட் உற்பட பல்வேறு பணிகளை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.மொத்தமாக நாடு முழுவதும் காலியாக இருக்கும் 11558 பணியிடங்கள் விட்டான் வாயிலாக நிரப்படவிருக்கின்றன. தகுதி, விருப்பம் இருப்போர் 13.10.2024 க்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் மற்றும் விபரங்கள்:
- டிக்கெட் சூப்பர்வைசர் (Ticket Supervisor) - 1,736
- ஸ்டேஷன் மாஸ்டர் (Station Master)- 994
- கூட்ஸ் ட்ரெயின் மேனேஜர் (Goods Train Manager)- 3,144
- ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் & டைப்பிஸ்ட் (Junior Account Assistant & Typist) - 1,507
- சீனியர் கிளர்க் (Senior Clerk) & டைப்பிஸ்ட் - 732
- கமர்சியல் டிக்கெட் கிளர்க் (Commercial Ticket Clerk) - 2,022
- அக்கவுண்ட்ஸ் கிளர்க் - 361
- ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட் - 990
- ட்ரெய்ன்ஸ் கிளர்க் - 72
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை = 11,558
கல்வித்தகுதிகள்:
1. சீப் கமெர்சியல், டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் ட்ரையின் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் டைப்பிஸ்ட் பணிகளுக்கு குறைந்தபட்சம் டிகிரி படித்திருக்க வேண்டும்.
2. கமர்சியல் டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், டைப்பிஸ்ட், ஜூனியர் கிளர்க், ட்ரெய்ன்ஸ் கிளர்க் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
டிகிரி தகுதியுள்ள பணியிடத்திற்கு 01.01.2025 அன்று, 18 வயது உடையோர் முதல் 36 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம்.
12 ம் வகுப்பு தகுதியுடைய பணியிடத்திற்கு 18 வயது முதல் 33 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம். இரண்டு பிரிவுகளில் உள்ள ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
மாத ஊதியம்:
1. சீப் கமெர்சியல் - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர் ரூ.35,400/-
2. கூட்ஸ் ட்ரெயின் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் டைப்பிஸ்ட் - ரூ.29,200/-
3. கமெர்சியல் டிக்கெட் கிளர்க் - ரூ.21,700/-
4. அக்கவுண்ட்ஸ் கிளர்க் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளர்க், டிரையின்ஸ் கிளர்க் - ரூ.19,900/-
தேர்வு முறை:
மேற்கூறிய பணியிடத்திற்கு 2 நிலைகளில் தேர்வு நடைபெறும். முதல்நிலை தேர்வு கணினி வழியாக நடைபெறும். இதில் தகுதி அடைந்தவர்கள், இரண்டாவது நிலைக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டாவது நிலை தேர்வில் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கூறிய பணியிடத்திற்கு மத்திய இரயில்வே அமைச்சகத்தின் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250 மட்டும் ஆகும். விண்ணப்பிக்க இறுதி நாளாக 13.10.2024 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.