Veteran Bharatanatyam doyen Yamini Krishnamurthy (Photo Credit: @PandeyJaideep X / @scarysouthpaw X)

ஜூலை 03, சென்னை (Chennai): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் கடந்த 20 டிசம்பர் 1940 அன்று பிறந்தவர் கிருஷ்ணமூர்த்தி (Bharatanatyam Doyen Yamini Krishnamurthy). இவருக்கு தற்போது 83 வயது ஆகிறது. மதனப்பள்ளியில் பிறந்தவர், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் வளர்க்கப்பட்டார்.

சீடர்களே தன் குழந்தைகள்:

பரதநாட்டிய கலையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்து வந்த யாமினி, அக்கலைக்காக தனது வாழ்க்கையை திருமணம் செய்யாமலேயே அர்ப்பணித்தவர் ஆவார். பரதநாட்டிய கலையை கற்றுக்கொள்ள கல்லூரி அமைத்து நடத்தி வந்த யாமினி, தனது சீடர்களே தன் குழந்தைகள் என எப்போதும் கூறுவார். Mohanlal Visits Wayanad Landslide Spot in Army Uniform: வயநாடு நிலச்சரிவு; ராணுவ சீருடையில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..!

தற்போது 84 வயதாகும் யாமினி, கடந்த 6 மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே, இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரதநாட்டிய கலைக்காக அவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.