Biriyani (Photo Crediit: Pexels)

டிசம்பர் 24, சென்னை (Kitchen Tips): ஸ்விகி நிறுவனம், இந்த ஆண்டிற்கான இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து ஒன்பது வருடமாக தன் இடத்தை விட்டுத் தரமால் தக்க வைத்திருக்கிறான் பிரியாணி (Biriyani) எனும் அசுரன். அதிலும் இப்பட்டத்தை சிக்கன் பிரியாணியே பெறுகிறது. அப்படி என்ன தான் பிரியாணில இருக்கு ஏதுக்கு இவ்ளோ ரசிகர் பட்டாளம் ?

பிரியாணி எனும் அசுரன்:

இந்திய உணவே இல்லாத இந்த பிரியாணிகளில் சேர்க்கப்படும், நம்மிடமிருந்து பிரிக்க முடியாத மசாலாக்களும் அதை செய்யும் முறையும் அதன் ருசியும் தான் நம்மை கட்டிபோட்டு வைத்துள்ளது. மேலும் இது பணக்காரர் மட்டும் வாங்கி சாப்பிடும் உணவு என்று இல்லாமல் அனைவருக்கும் பொதுவான, வீடுகளில் கூட சமைக்க முடிந்த உணவாக இருக்கிறது. அதனால் தான் காதுகுத்து, திருமணம், பிறந்த நாள், என அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். பக்கெட் பிரியாணி வாங்கினால் போதும் நண்பர்களுக்கு டிரீட் வைத்து விடலாம். பிரோமோஷனா, வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கிறார்களா அவ்வளவு தான் ஒரு பக்கெட் ஆர்டர் போட வேண்டியது தான். இன்னும் ஏழு ஆண்டுகள் ஆனாலும் பிரியாணி தான் ராஜாவாக இருக்கப்போகிறது போல. New Year 2025: "மகிழ்ச்சி பெருக.. மனிதநேயம் சிறக்க.." - புத்தாண்டு பண்டிகை 2025 வாழ்த்துச் செய்தி இதோ..!

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியல்:

இந்தாண்டு மட்டும் சுமார் 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. நிமிடத்திற்கு 9 பிரியாணி, அதாவது கிட்டதட்ட நொடிக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து இந்தியர்களால் அதிகம் ஆர்டர் செய்த உணவாக தோசை இடம்பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சிக்கன் ஃப்ரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நாண், வெஜ் ஃப்ரைடு ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன், இடம் பிடித்திருக்கின்றன. வெளிநாட்டு உணவில் இட்டாலின் பாஸ்தா,பிட்ஸா, மெக்ஸிக்கன் பௌல், ராமென், சூஸி ஆர்டர் ஆகி உள்ளது. இனிப்புகளில் குலாப் ஜாமூன், ரசமலாய், லாவா கேக், ரசகுல்லாவும் ஸ்னாக்ஸில் சமோசா, பாப்கான், பாவ் பஜ்ஜியும் ஆர்டர்கள் அதிகம் செய்யப்பட்டுள்ளன.