Nirmala Sitaraman (Photo Credit: @ANI X)

ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் . 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின் முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். Union Budget 2024: பீகார் மற்றும் ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!

அதேநேரம் தொடர்ந்து 7வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்கிற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெற்றார். இதற்கு முன் மொராஜி தேசாய் தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத் தொடரில் 2023 -24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பழைய வருமான வரி: இப்போது நடைமுறையில் உள்ள பழைய வருமான வரி முறையின் கீழ், ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி பிடித்தம் செய்யப்படும். ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வரி வருமானம் ஈட்டினால், 20% வரி பிடித்தம் செய்யப்படும். 10 லட்சத்துக்கும் மேலான வருமானத்திற்கு 30% வரி பிடித்தம் செய்யப்படும். 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 3 லட்சம் ஆகும். இதேபோல 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சம் ஆகும். பழைய வரி முறையின் கீழ், தனிநபரின் நிகர வருமானம் ரூ. 5 லட்சம் வரை இருந்தால், பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி பெறலாம். அதாவது தள்ளுபடி தொகை வருமான வரியில் 100 சதவீதம் அல்லது ரூ 12,500 ஆக இருக்கும். Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!

புதிய வருமான வரி: புதிய வருமான வரியின் கீழ் (Income Tax Budget) நிலையான கழிவு ரூ.50000 இல் இருந்து ரூ.75000 உயர்த்தப்படுகிறது. தனிநபருக்கான வருமான வரிச்சலுகை நிலையான கழிவு (Standard Deduction) ரூ.75 ஆயிரமாக அதிகரிப்பு செய்யப்படுகிறது. புதிய வருமான வரியின் கீழ் (Income Tax Slabs Rate) ரூ.3 இலட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி இல்லை. ரூ.3 இலட்சம் முதல் ரூ.7 இலட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5% வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.7 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.10 இலட்சம் முதல் ரூ.12 இலட்சம் வரை 15 % வரி, ரூ.15 இலட்சம் மற்றும் அதற்கும் மேல் வருமானம் பெறுவோருக்கு 30 % வரி பிடித்தம் செய்யப்படும். புதிய வரி முறையின் கீழ், தனிநபரின் நிகர வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருந்தால், பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி பெறலாம். அதாவது தள்ளுபடி தொகை வருமான வரியில் 100 சதவீதம் அல்லது ரூ 25,000 ஆக இருக்கும்.