டிசம்பர், 6: இந்தியர்களுக்கான தனித்துவ அடையாள அட்டையான ஆதார் கார்டு (Aadhar Card), கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. தனிமனிதனின் அடையாளமாக இருக்கும் ஆதார் கார்டு, அரசு & தனியார் சார்ந்த கல்வி மற்றும் நிதிஉதவி சலுகை பெறவும், தொழில் தொடங்குதல், வீடு வாங்குதல், கடன் பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் அத்தியாவசியமாகிறது.
ஆதார் கார்டை பொறுத்த வரையில், அதில் நமது கைரேகைகள் மற்றும் முக அடையாளங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவை நமது அடையாளங்களை கண்டறிய உதவி செய்கிறது. அரசினால் வழங்கப்பட்ட ஆதார் கார்டில் ஆண்டுகள் செல்லும் போது சில பதிவேற்றங்கள் செய்வது அவசியமாகிறது. அந்த வகையில், சிலர் தங்களின் பெயரை திருத்தம் செய்ய விரும்புவார்கள் அல்லது பெயரில் உள்ள பிழையை மாற்றம் செய்ய விரும்புவார்கள்.
இவர்கள் இணையவழியிலும் இ-சேவை மையத்திலும் சென்று தங்களின் பெயரை மாற்றம் செய்துகொள்ளலாம். அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் தாலுகா அலுவலகம், ஆதார் திருத்த அலுவலகத்திற்கு சென்று நேரடியாக பிழைகளை சரி செய்யலாம். இணையவழியில் வீட்டில் இருந்து மாற்றம் செய்ய விரும்புவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளபடி www.Uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். Murungai Keerai Chutney: உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் முருங்கையில், சுவையான துவையல் செய்து சாப்பிடலாம் வாங்க..!
அதில், My Aadhar என்ற பக்கத்தில் Update Demography Data என்ற இடத்தில் ஆதாரில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் செய்யலாம், அதனை எத்தனை முறை செய்யலாம், என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்ற தகவல் இடம்பெறும். பின்னர் Aadhar Update Portal என்ற இணைப்புக்கு சென்று நமது ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். அதனுள் சென்று Demography Data என்ற இடத்தில் பெயரை மாற்றம் செய்ய தேர்வு செய்து உங்களின் பெயரை பதிவு செய்யவும்.
அதற்கான ஆவணத்தையும் சமர்பித்துவிட்டு, பெயரை மாற்றுதலுக்குரிய பொத்தானை அழுத்தி ரூ.50 கட்டணம் செலுத்தி நமது பெயரை மாற்றம் செய்து உறுதி செய்துகொள்ளலாம்.
Note : ஆதார் கார்டை திருத்தம் செய்யும் சமயத்தில், நீங்கள் ஒருமுறை Login செய்து மாற்றங்களை விரைந்து செய்ய வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் திருத்த சேவை செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. நீங்கள் மீண்டும் முயற்சிக்கும் வகையில் இருக்கலாம்.