
பிப்ரவரி 17, மும்பை (Maharashtra News): பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் கல்லூரி, அலுவலகம் சென்று வருவது இயல்பானது இருப்பினும் மாதவிடாய் உள்ள நேரங்கள், மகப்பேறு காலங்கள், கருசிதைவு ஏற்பட்ட காலகட்டத்திலும் பெண்கள் வயிற்று வலி, முதுகு, கழுத்து வலி போன்ற உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. அவர்கள் அதையும் கடந்து தான் பணிபுரிகிறார்கள்.
கேரளாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அதே போல சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது மூன்று முதல் ஐந்து நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே ஜப்பான், இங்கிலாந்து, தென்கொரியா, ஜாம்பியா, மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மாதவிடாய்கான விடுப்பிற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், இதை இந்தியாவிலும் கொண்டு வருவதற்கு வழங்குவதை கொண்டு வரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. நூலிழையில் உயிர்தப்பிய ரைடர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. வாகன ஓட்டிகளே அலட்சியம் வேண்டாம்.!
மாதவிடாய் விடுமுறை:
உலக அளவில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும், ஒருசில பகுதிகளில் பெண் குழந்தைகளை படிக்க வைக்காமல் குழந்தை திருமணம் கூட செய்து வைக்கின்றனர். கடந்த ஒரு சில வருடங்களே இந்திய பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் பெரும்பாலும் படித்தவர்கள், இருபாலரும் வேலைக்கு செல்வதால் வேலைவாய்ப்பும் குறையவே செய்கின்றது. ஏற்கனவே பல நிறுவனங்கள் இரவு நேரத்தில் பெண்களை பணியமர்த்தவே தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் இது போன்ற உயிரியல் ரீதியாக உடலில் ஏற்படும் காரணங்களை வைத்து பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிப்பது அவர்களின் வேலை வாய்ப்பில் ஆபத்தை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது. தனியார் நிறுவனங்கள் இதனாலேயே பெண்களை வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டலாம். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிப்படைய அடைய வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.