Paracetamol Tablet (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 27, புதுடெல்லி (New Delhi): நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளை சிடிஎஸ்சிஓ எனும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO or Central Drugs Standards Control Organisation)ஆய்வு செய்வது வழக்கம். அதே போன்று சமீபத்தில் அதன் ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வின்போது 53 மாத்திரைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் கால்சியம், வைட்டமின் டி3, வைட்டமின் சி குறைபாடு, சர்க்கரை வியாதி, காய்ச்சலுக்கான பாரசிட்டமல், உயர் ரத்த அழுத்தற்கான மாத்திரைகளும் அடங்கும். Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; குற்றவாளியும் தற்கொலை.. காரணம் என்ன?!

தரமற்ற மாத்திரைகள்: குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் டி3 ஷெல்கால் (Shelcal), வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி குறைபாட்டுக்கான softgels, antiacid Pan-D, Paracetamol tablets IP 500 mg, சர்க்கரை நோய்க்கான Glimepiride, உயர் ரத்த அழுத்தத்திற்கான Telmisartan, வயிற்று தொற்று பிரச்சனைக்கு எடுத்து கொள்ளப்படும் மெட்ரோனிடாசோல், அன்டிபயோடிக்ஸ் மாத்திரையான Clavam 625, Pan D, குழந்தைகளுக்கான பாக்டீரியா தொற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும்ஹெட்டரோவின் செபோடெம் எக்ஸ்பி 50, கர்நாடகா அன்டிபயோடிக்ஸ் மற்றும் பார்மசூட்டிக்கல் லிமிடெட் வழங்கும் பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகள் அடங்கும்.

இதைத்தொடர்ந்து 6 நிறுவனங்களின் தயாரிப்புகளில் குறையிருப்பதாக, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பட்டியல் வெளியிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாத்திரை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை நாங்கள் உற்பத்தி செய்ய வில்லை என அந்தந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.