World Disability Day (Photo Credit: LatestLY)

டிசம்பர் 03, டெல்லி (Special Day): இரு கைகள் இல்லாதவர்களை விட, தன்னம்பிக்கை இல்லாதவர்களே மாற்று திறனாளிகள் என்பது முயற்சியாளர்களின் ஒருமித்த கருத்து. ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுதல்படி 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் (World Disability Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நல்வாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

உலகின் மக்கள் தொகையில் பத்து வீதத்தினர் அதாவது 65 கோடிப் மக்கள் ஊனமுற்றவர்கள் என உலக சுகாதார நிறுவகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். ஊனமுற்ற சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை கூறுகிறது. ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர். Astrology: 2025 ஆம் ஆண்டு ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்:

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000/-

6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000/-

9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000/-

இளங்கலை பட்டம் ரூ.6000/-

முதுகலை பட்டம் ரூ.7000/-

வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம்:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/-

இளங்கலை பட்டம் ரூ.5000/-

முதுகலை பட்டம் ரூ.6000/-

பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்:

  • 40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  • 75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  • 40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  • 40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது. Winter Breathing Problems: பனிக்காலத்தில் சுவாசப்பாதை தொற்று வராமல் இருக்க இதை பண்ணுங்க... விபரம் உள்ளே..!

சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம்:

மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு):

  • பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)
  • காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)
  • கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)
  • மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)

பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டம்:

பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டம். இதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு, பணிக்கு செல்வதற்கு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு 100 கி.மீ. மிகாமல் பயணம் செய்ய பேருந்து பயணசலுகைத் திட்டம். 75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்:

  • மூன்று சக்கரவண்டி
  • சக்கர நாற்காலி
  • சிறப்பு சக்கர நாற்காலி
  • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நவீன சிறப்பு சக்கர நாற்காலி
  • பிளாஸ்டிக் முட நீக்கியல் சாதனம்
  • உலோகத்திலான முட நீக்கியல் சாதனம்
  • செயற்கை கால்
  • ஊன்றுகோல்
  • இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
  • நவீன செயற்கை கால்
  • கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்
  • பிரெய்லி கைகடிகாரம்
  • எழுத்துகளை பெரிதாக்கும் கருவி
  • மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்
  • காதொலிக்கருவி
  • சூரிய ஒளியால் சக்திபெறும் பேட்டரி
  • காதுக்கு பின்னால் பொருத்தும் காதொலி கருவி