ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் கடந்த 1860 முதல் நேற்று வரை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் என மூன்று சட்டங்கள் அமலில் இருந்து வந்தன. இந்நிலையில் இந்த சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita), பாரதிய சாட்சிய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam) என 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று முதல் அமலாகி உள்ளது. Xiaomi launches Mijia Cold Water Kettle: சியோமி நிறுவனத்தின் புதிய கெட்டில்.. மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்..!
புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்:
- இனிமேல் குற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவை இல்லை. மின்னணு தகவல் தொடர்பு பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்கலாம்.
- கைது செய்யப்படும் போது கைதாகும் நபர் தமக்கு விரும்பிய உறவினர் அல்லது நபருக்கு அதைப் பற்றிய தகவலை அளிக்கலாம்.
- ஒரு வழக்கில் நீதிமன்றம் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க முடியும்.
- குழந்தையை வாங்குவது மற்றும் விற்பது கொடூரமான குற்றம் ஆகும்.
- 18 வயது நிரம்பாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
- பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பெண்ணின் உறவினர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில் பெண் காவல் துறையினர் பதிவு செய்ய வேண்டும். மேலும் மருத்துவ அறிக்கைகள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கின் நிலை மற்றும் முன்னேற்றம் தொடர்பாக 90 நாட்களுக்குள் அறிந்து கொள்ளலாம்.
- இனிமேல் பாதிக்கப்பட்டவர்கள் அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் மட்டும் இன்றி எந்த ஒரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்க முடியும்.