ஜனவரி 22, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): உச்ச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தி நகரமே வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
குவியும் பிரபலங்கள்: நாடு முழுவதும் இருந்து மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் நேற்று முதல் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். இன்றும் 100 தனியார் விமானங்களில் சிறப்பு விருந்தினர்கள் அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளனர். அயோத்தியில் ஒரே நேரத்தில் 100 விமானங்களை நிறுத்த முடியாது என்பதால், சிறப்புவிருந்தினர்கள் வரும் விமானங்கள் அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Mira Road Stone Attack: ஜெய்ஸ்ரீராம் முழக்கத்துடன் பேரணி; கல்வீசி நடந்த தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!
ராமர் கோயில் திறப்பு விழா ஆரம்பம்: தற்போது மங்கல இசையுடன் விழா தொடங்க உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள், தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைக்க உள்ளனர்.
சிறப்பு பூஜைகள்: கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கும். 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும். இதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். குழந்தை ராமரை வழிபட பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Shri Ram Janmabhoomi Temple all set for the Pran Pratishtha ceremony today. pic.twitter.com/83OeMqYBNs
— ANI (@ANI) January 22, 2024