Kiren Rijiju (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 08, புதுடெல்லி (New Delhi): மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை (Waqf Amendment Bill 2024) இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் கிரண் ரஜுஜு (Minority Affairs Minister Kiren Rijiju) பேசியதாவது, " வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதா யாருடைய உரிமையை பறிக்கவோ எந்தவொரு ஒரு மத அமைப்பின் சுதந்திரத்தில் தடையிடவோ இல்லை. மாறாக, இந்த உரிமைகளை பெறாதவர்களுக்கு அதனை வழங்கும் நோக்கிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது" என்று கூறினார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா: வக்ஃப் என்பது மசூதி, தர்கா, தங்குமிடங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கடவுளின் பெயரில் தானமாக கொடுக்கப்பட்ட சொத்தாகும். இது முஸ்லீம் செல்வந்தர்கள் மற்றும் முஸ்லீம் ஆட்சியாளர்களால் கொடுக்கப்பட்ட சொத்துகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, வக்ஃப் வாரிய நிலங்களை இந்திய அளவிலான இணையதளத்தில், உரிய நடைமுறையின்படி பதிவு செய்யப்பட வேண்டும். வக்ஃப் கவுன்சிலோ, வாரியமோ, நிலத்தை உரிமை கோர முடியாது. வக்ஃப் வாரியத்திடம் உள்ள நிலங்களை விற்க முடியாது. RBI Monetary Policy 2024: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!

நிலத்தின் உரிமை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படும். நிலத்தின் உரிமை தொடர்பான வக்ஃப் வாரியம் அல்லது கவுன்சிலின் முடிவை எதிர்த்து, 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம். இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே தங்களது சொத்தை வக்ஃப் வாரியங்களுக்கு வழங்க முடியும். வக்ஃப் வாரிய அமைப்புகளில் பெண்களை சேர்ப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு மொத்தம் 40 திருத்தங்களை மசோதா முன்மொழிகின்றது.