அக்டோபர் 09, பூரி (Odisha News): மத்திய கிழக்கில் (Middle East) உள்ள இஸ்ரேல் (Israel) நாட்டில், ஆயுதமேந்திய ஹமாஸ் (Hamas) பயங்கரவாதிகளுக்கும் - இஸ்ரேலிய அரசுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.
இருதரப்பும் பயங்கர (Israel-Palestine conflict) சண்டையிட்டு வரும் நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை பிணையக்கைதியாக்கி கடத்தி சென்று வருகிறது. தற்போது வரை அங்கு இருதரப்பிலும் 1000 பேர் பலியாகி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. Bus Crash Into Ditch: சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்கிய பேருந்து: 18 பயணிகள் காயம்.!
அமெரிக்கா (America) இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவத்திற்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள், இராணுவ தளவாடங்களை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனையில் அனைவரும் அமைதி திரும்ப வேண்டும் என, பிரபல மணற்சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிஷாவின் பூரி கடற்கரையில் தனது சிற்பத்தை வடித்தார்.
#WATCH | Odisha: Amid the ongoing Israel-Palestine conflict, sand artist Sudarshan Patnaik creates sand sculpture 'praying for peace', in solidarity at Puri. (08.10) pic.twitter.com/wtKabE1Xgl
— ANI (@ANI) October 9, 2023