டிசம்பர் 11, சென்னை (Chennai): எஸ்வந்த் கிஷோர் இயக்கத்தில், ஷான் ரகுமான் இசையில், எம்.கணேஷ் மற்றும் ஜே.தனுஷ் ஆகியோரின் தயாரிப்பில், உருவாகி, ஸ்ரீ சக்தி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் திரைப்படம் கண்ணகி (Kannagi 2023 Tamil Movie).
கண்ணகி படக்குழு: நடிகர்கள் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, நித்திய பிரதாப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதி சுதாகர், மௌனிகா உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்று, தற்போது டிசம்பர் 15 ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
டிரைலர் வீடியோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்புகள் மற்றும் பிற பணிகள் தாமதமாகின. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதியன்று வெளியாகி, தற்போது வரை 6 லட்சம் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
4 பெண்களின் வாழ்க்கை: படத்தின் தலைப்புக்கு ஏற்ப ட்ரைலர் காட்சிகளிலும் பெண்கள் இன்றளவில் சந்திக்கும் பல பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. 4 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது.
கருத்து என்ன?: சமூகத்தில் பெண்கள் மீது வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களை கருத்தில் கொண்டு கண்ணகி திரைப்படம் தயாராகி உள்ள நிலையில், படம் மக்களுக்கு என்ன கருத்தை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொப்புரானே பாடல்: இந்நிலையில், இன்று படத்தின் பாடல் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த பாடல் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.