மே 14, பெங்களூர் (Karnataka News): கர்நாடக (Karnataka) மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை (Karnataka Assembly Results 2023) தொகுதிகளில் கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக (BJP), காங்கிரஸ் (Congress) கட்சிகள் ஆட்சிக்காக போட்டியிட்டன. குமாரசாமியின் ஜனதா தளம் (எஸ்) JD(S) குறைந்த அளவிலான தொகுதியில் போட்டியிட்டது.
இந்த தேர்தல் முடிவுகள் மே 13 அன்று எண்ணி வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவுகளின் படி தொடக்கத்தில் இருந்து முன்னிலையில் இருந்த காங்கிரஸ், ஆட்சி அமைக்க தேவையான 113 சட்டப்பேரவை உறுப்பினர்களை விட கூடுதலாக 20க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றியது.
அதன்படி, 135 தொகுதிகளின் எண்ணிக்கையோடு தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி (Karnataka Congress Govt) அமைகிறது. பதவியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை (18.05.2023) அன்று பெங்களூரில் வைத்து நடைபெறுகிறது. பெருத்த எதிர்பார்ப்புடன் தேர்தலில் களமிறங்கி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்த பாஜக இனி எதிர்க்கட்சியாக செயல்படும்.
கர்நாடக மாநில காங்கிரசை பொறுத்தமட்டில் சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் ஆகியோர் இடையே முதல்வர் தொடர்பான பிரச்சனை நிலவுவதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் ஆட்சி உறுதியானதும் பாஜக சார்பில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை தனது ராஜினாமாவை உறுதி செய்தார். KA Election Results 2023: 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த பாஜக வேட்பாளர்; போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் கட்சியினர்.!
தற்போது ஆட்சி அமைக்க வேண்டிய இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவியேற்பு நேரம் மற்றும் நாள், அதற்கான சிறப்பு விருந்தினர்களாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. ஆனால், முதல்வர் யார் என்பது உறுதியாகவில்லை.
விரைவில் ராகுல் காந்தி அல்லது மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு கர்நாடகம் விரைந்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில அரசியல் என்பது சூடேறியுள்ளது. டி.கே சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முதல்வராக வேண்டும் என கோஷங்களும், சுவரொட்டிகளும் என தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டில் வெற்றி அடைந்த காங்கிரசுக்கு 40.84% வாக்கு விழுக்காடு பெற்று இருந்தது. 132 இடங்கள் வெற்றி அடைந்து இருந்தது. அதேபோல, தற்போது காங்கிரஸ் 42.88% க்கு மேல் வாக்குகள் பெற்று மீண்டும் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.