Tumkur Private bus Car Accident Visuals from Spot (Photo Credit: ANI)

ஏப்ரல் 15, தும்கூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டம் (Tumkur, Karnataka), தேசியநெடுஞ்சாலை எண் 48-ல் இன்று காலை ஹிரேஹள்ளி (Hirehalli) பகுதியில் தும்கூரில் இருந்து பெங்களூர் (Tumkuru to Bangalore) நோக்கி பயணம் செய்த கார் வந்தது. எதிர்திசையில் சிராவில் இருந்து தும்கூர் வழியே பெங்களூர் நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்தது.

இந்த இரண்டு வாகனங்களும் கியாதசந்தியா (Kyathasandra) காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்தபோது, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். Farm Fire: பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து.. 18 ஆயிரம் பசுக்கள் பரிதாப பலி.. டெக்ஸஸில் சோகம்.!

விபத்து குறித்து தகவல் அறிந்த கியாதசந்தியா காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.