ஏப்ரல் 25, சென்னை (Technology News): தென் கொரிய விஞ்ஞானிகள் ஒரு சில நொடிகளிலேயே ரீசார்ஜ் செய்யக்கூடிய உயர் சக்தி கொண்ட ஹைப்ரிட் சோடியம் அயன் பேட்டரியை உருவாக்கியுள்ளனர். இவை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இது மிகப்பெரிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சோடியம் அயன் கலப்பின ஆற்றல் சேமிப்பு திறன் கொண்ட செல்களை தயாரிப்பதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வந்தனர். Skin Beauty Care: சரும அழகை பாதுகாத்து கருப்பு நிறத்தை நீக்குவது எப்படி..! அசத்தல் டிப்ஸ் இதோ..!

மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் மொபைல் போன்களின் வருகை அதிகரித்து வருவதால், தற்போது அதிக உயர்சக்தி கொண்ட மின்வேதியியல் ஆற்றல் சேமிப்புத்திறன் சாதனங்களுக்கு அதிக தேவை ஏற்படுகிறது. மேலும், லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு (Lithium Ion Battery) மாற்றாக, இவை இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். 'Energy Storage Materials' பத்திரிக்கை, இந்த ஆய்வின் சிறப்பம்சங்களைப் பற்றிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், தற்போது தயாரிக்கப்படும் பேட்டரிகள் அனைத்தும் லித்தியம் கனிமத்தால் செய்யப்பட்டுள்ளது. இது பூமியில் கிடைப்பது அரிதானதாகும். லித்தியம் கிடைப்பதை விட, சோடியம் 1000 மடங்கு அதிகமாக கிடைக்கிறது. ​​சோடியம் அயனியை மின் ஆற்றல் மற்றும் இரசாயன வடிவில் சேமித்து வைத்துக்கொள்வது சுலபமான ஆற்றல் மூலமாகும்.