File Picture: India Map

டிசம்பர், 10: இந்தியத்திருநாட்டில் 28 மாநிலமும் 8 யூனியன் பிரதேசங்களும் (28 States & 8 Union Territories) உள்ளன. இவற்றில் பரப்பளவில், மக்கள் தொகையில் பெரிய மாநிலங்கள் குறித்த தகவலை இன்று காணலாம்.

பரப்பின் அடிப்படையில் மாநிலம்: இந்தியாவில் பரப்பளவின் அடிப்படையில் (Largest State of India) மிகப்பெரிய மாநிலமாக இருப்பது, உலகளவில் கவனிக்கப்படும் தார் பாலைவன கொண்ட இராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் தான். இம்மாநிலம் இந்திய நிலப்பரப்பில் 3,42,239 ச.கிமீ ஆட்கொண்டுள்ளது. புவியியல் ரீதியில் அது வறண்டு இருந்தாலும், கலாச்சாரம் மற்றும் தார்மீக நெறிகளை கொண்டாடும் அழகிய மாநிலம் ஆகும். 

இராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலம், மகாராஷ்டிரா ஆகியவை இந்தியாவை பிற முதல் 3 பெரிய மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராஜஸ்தான் மாநிலத்தின் மக்கள் தொகை 6,85,48,437 ஆகும்.

இராஜஸ்தான்: இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர். இம்மாநிலம் இந்தியாவின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையில் அமைந்து இருக்கிறது. இம்மாநிலத்தில் 33 மாவட்டமும், 25 மக்களவை தொகுதியும் இடம்பெற்றுள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் பார்லி, கடுகு, கொத்தமல்லி, வெந்தயம் போன்றவை பயிரிடப்படுகின்றன.

Rajasthan State Map

மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலம்: இந்தியாவில் மக்கள் தொகையின் அடிப்படையில் மிகப்பெரிய மாநிலமாக இருப்பது உத்திரபிரதேசம் ஆகும். கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அம்மாநிலத்தில் 199,812,341 மக்கள் வசிக்கின்றனர். அம்மாநிலம் 2,40,928 ச.கிமீ பரப்பளவு ஆக்கிரமித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்கள் மக்கள் தொகையை அதிகளவு கொண்டுள்ளன. Ladies Finger: அடேங்கப்பா.. வெண்டைக்காயில் இருக்கும் நன்மைகள் இவ்வுளவா??.. அசத்தல் தகவல்கள் உங்களுக்காக இதோ.! 

உத்திரபிரதேசம் (UttarPradesh): இந்தியாவில் கவனிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பதில் உத்திரப்பிரதேசத்தின் பங்கு தவிர்க்க முடியாதது. இம்மாநிலம் 75 மாவட்டங்களை கொண்டு 18 பிரிவாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் தலைநகராக லக்னோ இருக்கிறது.

UttarPradesh State Map

இம்மாநிலத்தின் கிழக்கே பீகார், தெற்கே மத்திய பிரதேசம், தென்கிழக்கில் ஜார்கண்ட் & சட்டிஸ்கர், மேற்கில் இராஜஸ்தான், வடமேற்கில் ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, வடக்கில் உத்திரகன்ட் & நேபாளம் எல்லையாக அமைந்துள்ளது.

இம்மாநிலமே இந்தியாவின் பிற மாநிலத்தை விட அதிகளவிலான பெருநகரங்களை கொண்ட மாநிலம் ஆகும். அதேபோல மிகப்பெரிய அளவிலான கரும்பு உற்பத்திக்கும், கோதுமை உற்பத்திக்கும் பெயர்போனது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 10:58 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).