மார்ச் 27, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தேவராஜ் (வயது 64). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மயிலாப்பூரில் உள்ள 7 வயது சிறுமிடம் பாலியல் தொந்தரவு செய்துவந்துள்ளார். சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் (Elderman Sentenced 10 Years Jail) புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், தேவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். Engineer Murder: மர்மமான முறையில் பொறியாளர் பலி – காவல்துறையினர் விசாரணை..!

இந்த வழக்கு நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. மேலும், வழக்கை விசாரித்த போது, தேவராஜ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசு சார்பில் ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.