ஆகஸ்ட் 07, புதுடெல்லி (NewDelhi): கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின்போது உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உள்ள "மோடி" என்ற பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அன்றைய நாட்களில் பலகோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நபரின் பெயருடன் ஒப்பிட்டு பேச, மோடி சார்ந்த சமூகத்தினர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. Causes of Skin Wrinkles: அச்சச்சோ.. இந்த வகை உணவுகளை அதிகம் சாப்பிடுறீங்களா?; விரைவில் முதுமை, தோல் சுருக்கம் ஏற்படுமாம்..!
இந்த தீர்ப்பை தொடர்ந்து அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு எழுந்துகொள்ள, காங்கிரஸ் கட்சி தொடர் சட்டப்போராட்டம் நடத்தி வந்தது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ராகுல் காந்தியின் சிறை தண்டனை உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் வழங்கப்படுவதாக லோக் சபா பொதுச்செயலர் உட்பல் குமார் சிங் அறிவித்துள்ளார்.