MP Tribal Youngster Face Urinated Case Accuse Pravesh Sukla Nabbed (Photo Credit: Twitter)

ஜூன் 05, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின இளைஞரின் முகத்தில் புகைபடித்தவாறு சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை தந்த நிலையில், வீடியோ வெளியான சிலமணிநேரத்திலேயே அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை விரைந்து கைது செய்ய ஆணையிட்ட அவர், தேவைப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை உபயோகம் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை, தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பிரவேஷ் சுக்லாவை தீவிரமாக தேடி வந்தனர். எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற உண்மையை அறிந்த அவர் தலைமறைவாக, நள்ளிரவு 1 மணியளவில் அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். Accident Video: குறுகிய சாலையில் இவ்ளோ வேகம் தேவையா மேடம்?.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!

பிரவேஷ் உள்ளூரில் அரசியல்கட்சியின் பிரமுகராகவும் வலம்வந்ததாக கூறப்படும் நிலையில், பாஜக பிரமுகருக்கு அவர் நெருக்கமாக இணைந்து எடுத்த போட்டோவும் வெளியானது. இதனால் அவர் பாஜக பிரமுகர் என்ற வாதங்களும் எழுந்தன. அவற்றை மறுத்துள்ள உள்ளூர் பாஜக நிர்வாகிகள், அவர் பிரச்சாரத்தின் போது புகைப்படம் எடுத்துக்கொண்டது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் பாஜகவில் பொறுப்பில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சுக்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.