பிப்ரவரி 20, ரைஸன் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரைஸன் மாவட்டத்தில் தங்க நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு இன்று 4 பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்று நகைகள் வாங்க வந்துள்ளது. அங்கு வந்திருந்த நால்வரும், கடையின் பணியாளர்களின் கவனத்தை திசைதிருப்பும் முனைப்புடன் பல நகைகளை கேட்டு வாங்குவதுபோல பாவித்துக்கொண்டு இருந்தனர்.
சிசிடிவி காட்சிகள் வைரல் & குற்றவாளிகளுக்கு வலைவீச்சு: பணியாளர்கள் நகைகளை எடுத்து காண்பித்துக்கொண்டு இருந்தபோதே, அவர்களின் கவனத்தை திசைதிருப்பி நால்வரும் காதணிகளை மொத்தமாக கொள்ளையடித்து சென்றனர். இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கா அணிந்து பெண்கள் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினாரா? அல்லது கொள்ளை கும்பலை சேர்ந்த ஆண்கள் பர்கா அணிந்து மோசடி செயலை அரங்கேற்றினாரா? என விசாரணை நடக்கிறது.
Four women steal tray full of earrings from a jewellery shop in MP's Raisen pic.twitter.com/VontbZEvsg
— The Times Of India (@timesofindia) February 20, 2024