ஆகஸ்ட் 19, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025' (Miss Universe India 2025) அழகியாக தேர்வு செய்யப்பட்டார். ஜெய்ப்பூரில் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2025 அழகிப்போட்டி நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட, மணிகா விஸ்வகர்மா (வயது 22) ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்கா நகரை சேர்ந்தவர் ஆவார். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் பேரில் மனைவி கொலை.. கணவர் கொடூர செயல்..!
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025:
இவர், கடந்த 2024ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் கிரீடத்தை வென்றார். இந்த 2025ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் முதலிடத்தை பிடித்தார். முதலாவது ரன்னர் அப் ஆக உத்தர பிரதேசத்தை சேர்ந்த தன்யா சர்மாவும், இரண்டாவது ரன்னர் அப் ஆக ஹரியானாவை சேர்ந்த மேஹக் திங்க்ராவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்ட மணிகா விஸ்வகர்மா (Manika Vishwakarma), நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கும் 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக மணிகா விஸ்வகர்மா தேர்வு:
Manika Vishwakarma gets crowned as Miss Universe India 2025. She will represent India at the 74th Miss Universe pageant in Thailand.#MissUniverseIndia2025 #ManikaVishwakarma pic.twitter.com/WcYr51HXVt
— All India Radio News (@airnewsalerts) August 19, 2025