ஆகஸ்ட் 19, காசியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் லோனி பகுதியில் உள்ள அங்கூர் விஹாரியை சேர்ந்தவர் சுமித் குப்தா. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு வழக்கில் சிறைக்கு சென்று, சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்தார். இதன்பிறகு, தன் மனைவி கவிதா குப்தாவின் (வயது 30) நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. சகோதரியை திட்டியதால் ஆத்திரம்.. மாமா கத்தியால் குத்திக்கொலை.., மருமகன் வெறிச்செயல்..!
கணவர் வெறிச்செயல்:
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 18) இரவு சுமித் வீட்டின் சமையலறையிலிருந்து கத்தியை (Murder) எடுத்து வந்து தனது மனைவி கவிதாவை குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சுமித்தை கைது செய்தனர். இதனிடையே, அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி கொலை:
இதுகுறித்த விசாரணையில், கள்ளக்காதல் சந்தேகத்தின் பேரில் சுமித் குப்தா தன் மனைவி கவிதா குப்தாவை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. கவிதா ஏற்கனவே, கணவரின் மிரட்டல்கள் குறித்து தனது குடும்பத்தினரிடம் பலமுறை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.