Union Health Minister Mansukh Mandaviya (PC: PTI, Pixabay)

டிசம்பர் 30, நொய்டா: 18 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தனது (Marion Biotech Doc1Max Syrup 18 Uzbekistan Child Died) மருந்து உற்பத்தியை நிறுத்திவிட்டது. சுகாதாரத்துறை சார்பில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டாவை தலைமையாக கொண்டு செயல்பட்டு வந்தது Marion Biotech மருந்து நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில் சளி, காய்ச்சல் மருந்துகள், மாத்திரைகள் பிரதானமாக உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிறுவனத்தின் மருந்துகள் ஐரோப்பா, ஜியார்ஜியா, நைஜீரியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிரிகிஸ்தான், அஜர்பைஜான், கென்யா, எத்தியோப்பியா, ஸ்ரீலங்கா, மியான்மர், லாவோஸ், வியட்னாம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Doc1Max Syrup

நேற்று முன்தினம் உஸ்பெகிஸ்தான் நாட்டு அரசு உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக நாடுகளிடம் பகீர் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில், இந்தியாவில் தயார் செய்யப்படும் Marion Biotech நிறுவனத்தின் சிரப் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டது. #Former MP Death Tragedy: முன்னாள் எம்.பி மஸ்தான் மர்ம மரணம் விவகாரம்; பணமோசடியால் கொலையா?.. அதிர்ச்சி திருப்பம்..!

அவர்களின் உயிரிழப்புக்கு Marion Biotech நிறுவனம் தயாரித்த Doc1Max மருந்து மட்டுமே காரணம். அந்நிறுவன சிரப்பில் எத்திலின் கிலைக்கால் (Ethylene Glycol) என்ற நச்சுப்பொருள் இருந்ததாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது என கூறியது.

இதனையடுத்து, இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. இந்நிலையில், இன்று Marion Biotech நிறுவனம் தனது மருந்து உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனம் நேற்று இரவு முதல் தனது உற்பத்திகளை நிறுத்திவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டாவியா அறிவித்துள்ளார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 30, 2022 02:18 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).