செப்டம்பர் 27, புதுடெல்லி (Cricket News): ஐசிசி 2023 ஆடவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் (ICC World Cup 2023) அக்டோபர் மாதம் 05ம் தேதியில் இருந்து தொடங்கி, நவம்பர் மாதம் 19ம் தேதியில் நிறைவு பெறுகிறது. ஆட்டத்தை இங்கிலாந்து - நியூசிலாந்து (England Vs New Zealand) அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தொடங்கி வைக்கின்றன.
இந்த ஆண்டில் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை இந்தியா (India Host ICC World Cup 2023) தனி நாடாக நடத்துகிறது. இந்தியாவில் உள்ள 10 வெவ்வேறு மைதானங்களில் போட்டிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Army Man Files False Complaint: பிரபலமாவதற்காக பொய் புகார்: இராணுவ வீரர் செய்த அதிர்ச்சி செயல்.! தட்டிதூக்கிய போலீசார்.!
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லை என்பதால், நடப்பு ஆண்டில் நடைபெறும் போட்டிகள் இந்தியாவுக்குள் நடந்தால் உச்சபட்ச எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. முதல் மற்றும் இறுதி ஆட்டங்கள் அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. நேரில் போட்டியை காண விரும்பிய பலரும், தற்போதே அங்கு தங்கும் விடுதிகளில் தேதிகளை குறிப்பிட்டு முன்பதிவு செய்து இருக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் ஆணையம் (International Cricket Council ICC) செப்டம்பர் மாதம் 28ம் தேதிக்குள் போட்டியில் கலந்துகொள்ளும் நாடுகளின் வீரர்கள் பட்டியலை வெளியிட அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, போட்டியில் கலந்துகொள்ளும் நாடுகள் தங்களது நாட்டின் சார்பில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
13வது ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா (Australia), இங்கிலாந்து (England), பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தான் (Afghanistan), பங்களாதேஷ் (Bangladesh), ஸ்ரீ லங்கா (Sri Lanka), நியூசிலாந்து (New Zealand), நெதர்லாந்து (Netherlands), தென்னாபிரிக்கா (South Africa) மற்றும் மேற்கிந்திய தீவுகள் (West Indies) ஆகிய 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி முதன் முதலாக உலககோப்பைக்குள் அடியெடுத்து வருகிறது. HC On Working Wife and Low Maintenance: மனைவி வேலைக்கு சென்றாலும் ஜீவனாம்ச தொகை குறைக்கப்படாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! காரணம் இதோ.!
10 அணிகளுக்குள் நடக்கும் போட்டியில், இறுதியில் புள்ளிபட்டியலில் முதல் 4 புள்ளிகளை பெற்ற அணிகள் அரையிறுதிபோட்டிக்கு தேர்வு செய்யப்படும். முதல் புள்ளியை பெற்றுள்ள அணியும், மூன்றாம் புள்ளியை பெற்றுள்ள அணியும் ஒரு பிரிவாக மோதிக்கொள்ள, இரண்டு - நான்காம் புள்ளியில் இருக்கும் அணிகள் ஒரு பிரிவாக மோதிக்கொள்ளும். இந்த 4 அணிகளில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை 2023 போட்டியில் விளையாடும் 10 அணிகள் மற்றும் அணிகளின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு (Here are the squads of all 10 teams in the ICC World Cup 2023):
இந்தியா (Team India Squad): ரோஹித் சர்மா (Rohit Sharma கேப்டன்), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya துணை கேப்டன்), ஷுப்மன் கில் (Shubman Gill), விராட் கோலி (Virat Kohli), ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), கேஎல் ராகுல் (KL Rahul), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur), ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah), முகமது சிராஜ் (Mohammed Siraj), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), முகமது ஷமி (Mohammed Shami), அக்சர் படேல் (Axar Patel), இஷான் கிஷன் (Ishan Kishan), சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav).
ஆஸ்திரேலியா (Team Australia Squad): பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர் (David Warner), ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க். EcoMap Technologies Founder Dead: எகோமேப் டெக்னலாஜி நிறுவனரான 26 வயது இளம் பெண் தொழிலதிபர் மர்ம மரணம்; வீட்டில் சடலமாக மீட்பு.!
இங்கிலாந்து (Team England Squad): ஜோஸ் பட்லர் (Jos Buttler கேப்டன்), மொயின் அலி (Moeen Ali), கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன் (Sam Curran), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.
தென்னாபிரிக்கா (Team South Afria Squad): டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், அண்டில் பெஹ்லுக்வாயோ, லிசாட் வில்லியம்ஸ், கேசவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, தப்ராசி ஸ்பாடா, தப்ராஸ்ஸி ரபாடா டஸ்சென்.
ஆப்கானிஸ்தான் (Team Afghanistan Squad): ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷுத் கான், அப்துல் ரஹ்மான், நூர் அகமது, முஜீப் அல் ரஹ்மான் ஹக், குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், ஃபரித் அஹ்மத் மாலிக்.
வங்காளதேசம் (Team Bangladesh Squad): ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), டான்சித் தமீம், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், தவ்ஹித் ஹ்ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், தஸ்கின் அஹ்மத், முஸ்த் மஹ்மூத், தஸ்கின் மஹ்மூத், Tiger 3 on Deepawali 2023: தீபாவளி ரேஸில் இணைந்த சல்மான் கானின் டைகர் 3: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தமிழில் சல்மான் ட்விட்..!
நெதர்லாந்து (Team Netherlands Squad): ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
நியூசிலாந்து (Team New Zealand Squad): கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.
பாகிஸ்தான் (Team Pakistan Squad): பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது அப்ரிடி வாசிம். Iraq Massive Fire: திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்: தீ விபத்தில் 110 பேர் பலி., 150 பேர் படுகாயம்.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
ஸ்ரீ லங்கா / இலங்கை (Team Sri Lanka Squad): தசுன் ஷனக (கேப்டன்), குஷால் மெண்டிஸ், குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, மதீஷ பத்திரன, லஹிரு குமாரா, தில்ஷன் மதுஷங்க.
கடந்த 2019 ஆடவர் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இறுதியில் பலபரீட்சை நடத்தி, கோப்பையை இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது. 2019 கிரிக்கெட் உலகக்கோப்பையை இங்கிலாந்து நாடு தலைமையேற்று நடத்தியது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களை அன்று பதைபதைக்க வைத்தது.
அதே இரண்டு அணிகள் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் தொடங்குகிறது. இந்தியாவுக்கான முதல் ஆட்டம் அக். 08ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்குகிறது.