Moon Pictures Clicked by Chandrayaan 3 (Photo Credit Twitter)

(ஆகஸ்ட் 21, பெங்களூரு): நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் சந்திரயான் 3 (Chandrayaan ) விக்ரம் லேண்டர் நாளை மறுநாள் தரையிறங்கவிருக்கிறது. இந்நிலையில், நிலவுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்றுள்ள சந்திராயன் 3 கட்டுப்பாட்டறைக்கு சில புகைப்படங்களை அனுப்பியுள்ளது. ஆழமான குழிகள் மற்றும் பாறாங்கற்கள் இல்லாத பகுதியில் தரை இறங்குவதற்காக லேண்டரில் செயற்கை  நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கக் கூடிய கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி பூமியிலிருந்து புறப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ளது. அதைத் தொடர்ந்து சில நாட்கள் முன்பு விஞ்ஞானிகள் இதை கொஞ்சும் கொஞ்சமாக நிலவுக்கு அருகாமையில் கொண்டுவந்துள்ளனர். Asia Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023-ல் களமிறங்கும் இந்திய சிங்கங்களின் லிஸ்டை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!

தற்போது லேண்டருக்கும்-நிலவுக்கும் இருக்கின்ற குறைந்தபட்ச தூரம் 25 கி.மீ என்றும், அதிகபட்ச தூரம் 134 கி.மீ என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து வருகிற 23ஆம் தேதி மாலை ஆறு மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக தரையிறங்குமென்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் இந்த நிகழ்வுக்காக (Chandrayaan 3 Vikram lander landing) பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். எனவே அனைவரது எதிர்ப்பார்ப்பையும் நிறைவேற்றும் விதமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சியை நேரலையில் பார்க்கலாம் என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது. இந்த நேரலையை மாலை 5.27 மணியிலிருந்து இஸ்ரோ இணையத்தளம் (website), ஃபேஸ்புக் (Facebook) பக்கம் மற்றும் யூ டியூபிலும் (YouTube) காணலாம்.