மார்ச் 26, பெங்களூரு (Karnataka News): கர்நாடகா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) நேற்று தொடங்கியது. முதல் நாள் மொழி பாடத் தேர்வுகள் நடந்தது. சுமார் 8.69 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில், கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் தாயும், மகனும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது. UN Security Council Resolution: ஐ. நா. பாதுகாப்பு சபையில் அவசர தீர்மானம் – காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய முடிவு..!
யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஷாகாபுரா தாலுகாவில் சாகாரா கிராமத்தில் வசிக்கும் கங்கம்மா (வயது 32). இவருடைய மகன் மல்லிகார்ஜுனா (வயது 15) பத்தாம் வகுப்பு படிக்கிறார். கங்கம்மா ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது. இதனால், தனது மகன் உதவியுடன் சேர்ந்து படிக்கத் துவங்கி, பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று கர்நாடகா மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதுவதற்காக தாயும், மகனும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பள்ளி தேர்வு மையத்திற்கு வந்தனர். பின்னர், இருவரும் தனித் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதினர். ஒரே நேரத்தில் தாயும், மகனும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.