Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 21, குருகிராம் (Haryana News): ஹரியானா மாநிலம், குருகாமில் (Gurugram) நுஹ் மாவட்டத்தின் ஜெய்சிங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜியா (வயது 56). இவரது மகன் ஜாம்ஷெட் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் ஆவார். ராஜியாவின் கணவர் முபாரக் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 19) இரவு, ஜாம்ஷெட் தனது தாயார் ராஜியாவிடம் ரூ.20 கேட்டுள்ளார். அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். Parliament Monsoon Session: பொருளாதாரத்தில் முன்னேறிய இந்தியா.. உறுதி செய்த பிரதமர் மோடி.!

தாய் கொடூர கொலை:

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது தாயை கோடரியால் வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த விசாரணையில், ஜாம்ஷெட் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது. நீண்ட காலமாக கஞ்சா மற்றும் அபின் ஆகியவற்றை உட்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், தனது தாயைக் கொன்ற (Murder) பிறகு, ஜாம்ஷெட் இரவு முழுவதும் அதே வீட்டில் தூங்கினார் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.