PM Narendra Modi Press Meet (Photo Credit : @ANI X)

ஜூலை 21, புதுடெல்லி (New Delhi News): இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை அடுத்த 30 நாட்களுக்கு விறுவிறுப்புடன் செயல்பட உள்ளது. தேசிய விளையாட்டு, நிர்வாக மசோதா, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல், ஆபரேஷன் சித்தூர் தொடர்பான விவாதம் உட்பட பல்வேறு அரசியல் நகர்வுகளும், மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் பணக்கட்டுகள் வீட்டிலிருந்த விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நீதிபதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாகவும் மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. Breaking: முதல்வர் தலைமையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா.! 

செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி :

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா விண்வெளி துறையில் புதிய சாதனையை கையில் எடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 100% வெற்றியடைந்துள்ளது. நாட்டில் நக்சலைட்டின் பிடியில் இருந்த மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார மண்டலமாக வளர்ச்சி அடைந்துள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா எட்டும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாட்டில் பணவீக்கம் குறைந்து வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. இந்திய விண்வெளி வீரர் சுபாக்ஸு சுக்லா வரலாறு படைத்திருக்கிறார் "என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து நரேந்திர மோடி பேசிய வீடியோ :