Bharat Bandh (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 21, டெல்லி (Delhi News): இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 21) பாரத் பந்த் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி (SC/ST Reservation) பிரிவினருக்கு கிரீமி லேயர் இடஒதுக்கீடு வழங்கும் உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) சமீபத்திய தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு:

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் தொடர்பான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், 'அனைத்து எஸ்சி, எஸ்டி பிரிவினரும் மற்றும் பழங்குடியினரும் சம வர்க்கம் இல்லை' என்று கூறியது. இந்த மக்களின் முன்னேற்றத்திற்காக, மாநில அரசுகள் SC/ST இடஒதுக்கீட்டை வகுப்பதன் மூலம் தனி ஒதுக்கீட்டை அமைக்கலாம். மேலும், மாநிலங்களுக்கு தேவையான அறிவுரைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியது. மாநில அரசுகள் தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்க முடியாது என்றார். பாரத் பந்த் (Bharat Bandh) காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். போராட்டத்தின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். Child Killed A Snake: பாம்பினைக் கடித்து துப்பிய ஒரு வயது குழந்தை.. அதிர்ந்த வைத்தியர்கள்..!

கடை அடைப்பு:

இந்நிலையில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், பீகார் மாநிலத்தில் பீமா சேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சி அமைப்புகள் பாரத் பந்திற்கு ஆதரவு அளித்துள்ளன. பீமா சேனா அமைப்பினா் பீகாரின் சேக்புரா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டம் தீவிரம்:

இதேபோல பாரத் பந்திற்கு அழைப்புவிடுத்த பச்சோவ் சங்கா்ஸ் சமிதியினா் பீகாரின் உன்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஒடிசாவில் புவனேஷ்வா் ரயில் நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் நுழைந்தனர். அவர்கள் விஷாகா விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினா். அவா்களை ரயில்வே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனா். இதனால், ரயில் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுமட்டுமின்றி புவனேஷ்வா், சம்பல்பூர், ரூர்கேலா, ராயகடா உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு தலித் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். அவா்களது போராட்டத்தால் ஒடிசா, பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்கள் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், பாட்னா உள்ளிட்ட பகுதிகளில் காவல்நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவா்கள், வாகன டயா்களை எரித்து தங்கள் எதிர்ப்பை ஆக்ரோஷமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் பாரத் பந்த் தீவிரம் அடைந்து வருகிறது.