
ஆகஸ்ட் 21, கயா (Bihar News): பீகார் மாநிலத்திலுள்ள கயா மாவட்டத்தின் ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுஹர் கிராமத்தில் வசிக்கும் ராகேஷ் குமாரின் ஒரு வயது குழந்தை ரியான்ஷ் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு குட்டி ஒன்று மொட்டை மாடியை அடைந்தது, அதைக் குழந்தை பொம்மையாகக் கருதி, அதைப் பிடித்து விளையாடத் தொடங்கியது. Biker Washed Away In Flood: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி.. காப்பாற்றிய பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!
சிறிது நேரத்தில் குழந்தை பாம்பை வாயில் எடுத்து மென்று தின்றது (Child Killed A Snake). அதை பார்த்த குழந்தையின் தாய் பதறி போய், குழந்தையின் வாயில் இருந்த பாம்பை அவசர அவசரமாக வெளியே எடுத்து ஃபதேபூர் சமூக நல மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர் குழந்தைக்கு சிகிச்சை அளித்து குழந்தை பூரண நலமாக இருப்பதாக கூறினர். இருப்பினும் குழந்தை பாம்பை வாயில் போட்டு மென்று கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.