Gyanesh Kumar (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 19, டெல்லி (Delhi News): இந்திய தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்று (பிப்ரவரி 18) முடிவடைந்து. இதனிடையே, புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 17) தேர்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக (Chief Election Commissioner of India) ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். மேலும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுதலுடன் அன்று நள்ளிரவே அறிவிப்பு வெளியானது. Gyanesh Kumar: ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!

ஞானேஷ் குமார் பதவியேற்பு:

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 19) ஞானேஷ் குமார் (CEC Gyanesh Kumar)இன்று இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்றார். இவர் தேர்தல் ஆணையராகவும், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-யை நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும் முக்கியப் பங்கு வகித்தார். மேலும், அயோத்தி ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும், இவருடைய பங்களிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இதோ: