Gyanesh Kumar as Chief ECI (Photo Credit: @SpokesPersonECI X)

பிப்ரவரி 18, புதுடெல்லி (New Delhi News): இந்திய தலைமை தேர்தல் அதிகாரி (Chief Election Commissioner of India) பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் 18 பிப்ரவரி 2025 இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதனால் தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்புக்கு பல ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஞானேஷ் குமார் (Gyanesh Kumar)-ஐ தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற சட்டத்துறை ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலில் ஞானேஷ் குமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. Couple Luckily Escapes: சட்டென குறுக்கே ஓடிய நாய்.. நூலிழையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி.. பதறவைக்கும் காட்சிகள்.! 

தலைமை தேர்தல் அதிகாரி & ஆணையர் நியமனம்:

நாளை (19 பிப்ரவரி 2025) அன்று இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்கும் ஞானேஷ் குமார் 26 ஜனவரி 2029 வரையில் பொறுப்பு வகிப்பார். அதேபோல, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஹரியானா மாநிலத்தின் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கடந்த 1 செப் 2020 அன்று தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ராஜீவ் குமார், 15 மே 2025 அன்று இந்தியாவின் 25 வது தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஞானேஷ் குமார் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்: