Prostitution & Arrested (Photo Credit: Pixabay)

ஜூலை 09, பெங்களூர் (Karnataka News): கர்நாடகாவில் விபச்சாரம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேர், லோகாண்டோ எனும் சட்டவிரோத செயலியை உருவாக்கி அதன் மூலம் மக்களை பாலியல் சேவைக்களுக்காக (Sex Services) அழைத்துள்ளனர். அது மட்டும் இன்றி ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் மற்றும் ஒரு இரவுக்கு 4000 ரூபாய் என்று பதிவு செய்து கொள்ளலாம் என விளம்பரப்படுத்தி உள்ளனர்.

இதனை நம்பி குஷால் நகரை சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் 1500 ரூபாய் செலுத்தியுள்ளார். தொடர்ந்து அவரை காலேகாட் லாட்ஜ்க்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கே அவர் சென்றதும் அவரிடம் அதிகப்படியான பணம் கேட்டுள்ளனர். இதை எடுத்து பாதிக்கப்பட்ட அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். Canada Visa Fraud: "கனடாவிற்கு வேலைக்கு போறீங்களா.. வேலை விசா நாங்க தரோம்.." என 40 பேரை ஏமாற்றிய தம்பதியினர்..!

8 பேர் கைது: காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து, ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (29), சந்தீப் குமார் (25), ராகேஷ் (24), ஜெயலட்சுமி (29), சஹானா (19), பல்லவி (30), அபிஷேக் (24) மற்றும் ஒரு மைனர் பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிசி பிரிவுகள் 66 (சி), 66 (டி), 419, 420 மற்றும் 468 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இதேபோன்ற சம்பவங்களில் மாநிலம் முழுவதும் பலரை ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து எஸ்பி கே ராமராஜன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.