Mohammed Shami (Photo Credit: @surajsid44 @Kohli_Goat_ x)

டிசம்பர் 14, டெல்லி (Delhi): இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி (Mohammed Shami), 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். அந்த தொடரின் போது இலங்கை அணிக்கு எதிராக முகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கீழே முட்டி போட்டு அமர்ந்த போது, இஸ்லாமியர்கள் நமாஸ் செய்வது போன்று அமர்ந்தார். அதை வைத்து பாகிஸ்தான் ஊடகங்கள் முகமது ஷமி நமாஸ் செய்ய முயன்றார். ஆனால், அப்படி செய்தால் வரும் பின்விளைவுகளை எண்ணி அவர் அதை தவிர்த்து விட்டார் என கூறி ட்ரோல் செய்தனர்.

பதிலடி கொடுத்த முகமது ஷமி: இதனால் கடுப்பான முகமது ஷமி, தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனைப் பற்றி அவர் கூறியுள்ளதாவது, "நமாஸ் செய்ய விரும்பினால் என்னை யாரும் தடுக்க முடியாது. நானும் யாருடைய பிராத்தனையும் தடுக்க மாட்டேன். நான் பிராத்தனை செய்ய விரும்பினால் நிச்சயம் செய்வேன். இதில் யாருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. நான் ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்தியர்என்பதில் பெருமை கொள்கிறேன்." என்று கூறியுள்ளார். Rowdy Killed in Encounter: 18 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி விக்கியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.. அதிரடி நடவடிக்கை.!

மேலும் பேசிய அவர், "ஒருவரிடம் பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்? நான் இதற்கு முன் எப்போதாவது 5 விக்கெட் வீழ்த்திய பிறகு பிரார்த்தனை செய்திருக்கிறேனா? நான் பல ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். நீங்கள் எங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், நான் அங்கு சென்று பிரார்த்தனை செய்கிறேன். தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி தொந்தரவு செய்ய நினைக்கிறார்கள்." என்று கடுமையாக பேசியுள்ளார்.