MPs Suspended (Photo Credit: @MPAbdulKhaleque X)

டிசம்பர் 19, புதுடெல்லி (New Delhi): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கீழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகளை வீசினர். இதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பற்றி விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்கள் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டனர். TN Minister Anbil Mahesh: அரசுப் பள்ளி ஆசிரியைகள் இனி சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

49 எம்.பி.க்கள் இடைநீக்கம்: இதனைத் தொடர்ந்து, அதே கோரிக்கையை முன் வைத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் நேற்று மக்களவை எம்.பி.க்கள் 33 பேரும் மாநிலங்கலவை எம்.பி.க்கள் 45 பேரும் என மொத்தம் 78 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.