ஜனவரி 03, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. Rakul Preet Singh Wedding: ரகுல் ப்ரீத் சிங்க்கு திருமணம்.. மாப்பிள்ளை பற்றி தெரியனுமா?.!
அயோத்திக்கு 500 ரயில்கள்: தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்திக்கு செல்ல வசதியாக ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதற்காக சிறிய ரயில் நிலையமாக இருந்த அயோத்தி தாம் ரயில் நிலையம் 240 கோடி செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும் நாட்டின் 16 ரயில்வே மண்டலங்கள் சார்பாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்தியை இணைக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.