ஏப்ரல் 30, பாகல்பூர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் ஆமபூர் கிராமம் அருகே நேற்று இரவு சொகுசு மகிழுந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் எண் 80-ல் சென்று கொண்டிருந்தது. மங்கர் நகரில் உள்ள தபரி பகுதியில் திருமண நிகழ்ச்சியில் பங்குபெற்று, அங்கிருந்து காஹல்காவன் நகர் ஸ்ரீமத்பூர் நோக்கி சொகுசு காரில் சிலர் பயணம் செய்துள்ளனர். Cops Died: காவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு; அமெரிக்காவில் 3 காவலர்கள் பரிதாப பலி.!

இந்நிலையில், கோகா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்றுக்கொண்டிருக்கும் போது, இரும்பு தடிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி (Cargo Truck) ஒன்று வந்துள்ளது. திடீரென லாரியின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாக இவர்கள் பயணித்த காரின் மீது கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்தவர்கள் சிக்கிக்கொண்டு கத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அருகில் உள்ள பொதுமக்கள் சிலர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களோடு இணைந்து, இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடந்துள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.