School Bus Accident (Photo Credit: @InformedAlerts X)

ஜனவரி 02, கண்ணூர் (Kerala News): கேரள மாநிலத்தின் கண்ணூர் அருகே குருமாத்தூரில் உள்ள சின்மயி பள்ளிக்கு இன்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றது. அப்போது திடீரென பிரேக் செயலிழந்த காரணத்தால் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த போது பேருந்தில் 20 மாணவர்கள் இருந்துள்ளனர். அதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Man Gets Life Sentence: 5 மணிநேரத்தில் 3 முறை பாலியல் வன்கொடுமை.. சிறுமியை சீரழித்த பாவிக்கு ஆயுள் தண்டனை..!

பள்ளி பேருந்து விபத்து:

நெத்யா எஸ் ராஜேஷ் (10) என்கிற மாணவன் மட்டும், பஸ் கவிழ்ந்ததில் ஜன்னல் வழியே விழுந்து பஸ்சின் அடியில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். இந்த விபத்து சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நிஜாம் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிஜாமின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். ரேக் பழுதடைந்ததே விபத்துக்கு காரணம் என ஓட்டுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் எம்விடி சோதனையில், விபத்துக்குப் பிறகும் பிரேக்குகள் சரியாக பம்ப் செய்யப்படுகின்றன.

திடீரென தலைகுப்புற கவிழ்ந்த பள்ளிப் பேருந்து: