ஜனவரி 02, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலம், சூரத் (Surat) நகரில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அன்று இரவு, சிறுமியை பாலியல் பலாத்காரம் (Rape) செய்த நபருக்கு நேற்று (ஜனவரி 01) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில், வல்சாத்தின் பார்டி தாலுகாவில் வசிக்கும் 16 சிறுமி, ஷேர்சாட் (ShareChat App) ஆப் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள பிவாண்டியைச் சேர்ந்த முகமது சாதிக் காத்ரி (வயது 35) என்ற நபருடன் பழகி வந்தார். இவர்கள் இருவரும் 7 மாதங்கள் பேசிக் கொண்டிருந்தனர். Woman Dies: மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரம்; கணவர் உட்பட 3 பேர் கைது..!
சிறுமி பாலியல் பலாத்காரம்:
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அன்று, அந்த நபர் சிறுமியை தனிமையில் சந்திக்க வற்புறுத்தியதால், சிறுமி மும்பைக்கு செல்ல தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவர், வாபி ரயில் நிலையத்தை அடைந்து மும்பைக்கு ரயிலில் ஏறினார். ரயில் உமர்கம் நிலையத்தில் நின்றதும், அவளை வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து வெளியே கூட்டிச் சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சிறுமியை, சுமார் 5 மணி நேரத்தில் 3 முறை கொடூரமாக பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார்.
ஆயுள் தண்டனை:
இதுதொடர்பாக எழுந்த புகாரின்பேரில், காவல்துறையினர் அவரை கைது தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் நவ்சாரி சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.பிரம்பட், குற்றம்சாட்டப்பட்ட முகமது சாதிக் காத்ரி என்பவருக்கு கடைசி மூச்சுள்ள வரை ஆயுள் தண்டனை (Life Imprisonment) விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094.
ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3