Earthquake (Photo Credit: @Inkhabar X)

மார்ச் 13, ஜார்க்கண்ட் (Jharkhand News): உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் (Jharkhand) சிம்தேகாவில் (Simdega) லேசான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 2.22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. Apply LLR License At E-Seva Centres: வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் வாங்க வேண்டுமா?. இனி இ-சேவை மையம் போனால் போதும்..!

நேற்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியது. மேலும் யூனியன் பிரதேசமான அந்தமானில் (Andaman) அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 12) இரவு 11.32 மணியளவில் அந்தமான் கடலோரப் பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.