Baby (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 04, சாம்ராஜ்நகர் (Karnataka News): கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகருக்கு உட்பட்ட ஹங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் மற்றும் சுபா தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் 6 மாதங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த தம்பதி 6 மாதங்களுக்கு முன் பிறந்த தங்களது ஆண் குழந்தைக்கு காது குத்துவதற்காக பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு கூட்டிச் சென்றுள்ளனர். Woman Tricks Husband: ரூ.10 லட்சத்திற்கு கணவரின் கிட்னியை விற்ற மனைவி.. காதலனுடன் ஓட்டம்..!

6 மாத குழந்தை பலி:

பின்னர் அங்கிருந்த மருத்துவர் நாகராஜு , குழந்தையின் இரு காதுகளின் மடல்களிலும் மயக்க மருந்து ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ரூ 200 கட்டணமாக வசூலித்தாராம். ஆனால் வீரியம் அதிகமான ஊசியை போட்டதால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது. சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில், ஊசி போட்ட மருத்துவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோருகின்றனர். தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.